தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூபாய் 300 கோடியில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி இன்று நவம்பர் 6 தொடங்கப்பட்டது, இவ்விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்..
அது தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு வருகிறேன், கோவைக்கு இதுவரை மூன்று முறை வந்து பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன், மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவித்து அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்ய சொல்லி முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன் அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோவையிலிருந்து தொடங்கியுள்ளேன் என்றார், மேலும் நேற்று முதல் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம் பேக் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி, தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார் என்றும் செந்தில் பாலாஜி கோவையில் நூலகத்தோடு சேர்ந்த அறிவியல் மையம் அமைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறினார், மேலும் கோவையில் தந்தை பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் சென்னையில் அண்ணா நூலகம் மதுரையில் கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாக உள்ளது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையில் சிறப்புரை ஆற்றினார், மேலும் இதன் திறப்பு விழா ஜனவரி 2026 நடைபெற உள்ளது என்று நேற்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது என்றும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன் என்றும் அதில் கூறியுள்ளார், கோவை நகரில் புறணமைக்கப்படாத சாலைகள் பாதாள சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள் மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார், மேலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து சிறந்த மாநிலமாக உள்ளது இப்போது தெற்கு தான் வடகிழக்கிற்கும் வாரி வழங்குகிறது இவ்வாறு அவர் பேசியுள்ளார்..!!




