கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர், அரசியல் கருத்துக்கள் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் அருண் காந்த், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று செம் ட்ரையல்ஸ் எனப்படும் பதிவு ஒன்றினை பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாகணத்தில் தடை செய்யப்பட்ட ரசாயன விதைப்பை வானில் விமானங்கள் உதவியுடன் அதிகாரிகள் மேற்கொள்கின்றன. இது மத்திய அரசின் கவனத்திற்கு வராமல் உள்ளது. இவ்வாறான செயல்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கண்கள் பாதிக்கப்படுகின்றது. மேலும் விமானங்களின் உதவியுடன் நடு வானில் தூவப்படும் இந்த ரசாயனங்களுக்கு காரணம் என்ன..? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விமானம் பறக்கும் போது நடுவானில் அதன் எஞ்சின் பகுதியில் இருந்து புகைகள் சில தூரம் வெளியாகி பின் மறைகிறது. இவை இயற்கையான காற்றில் கலந்து விடும். இந்நிகழ்வை ரசாயன வேதிப்பொருள் தூவல் என அருண் வர்ணித்துள்ளார். இது தொடர்பான உண்மை நிலவரம் தற்போது வரை தெரியவில்லை. அவர் ஆட்சியாளர்களிடம் தனது கேள்வியை முன் வைத்துள்ளார். ஒரு சிலர் அவரின் கருத்து பக்கத்திலேயே அதன் இன்ஜினியிலிருந்து வெளியேறும் புகை என்றும் பதிவிட்டுள்ளனர்.
அவர்களிடம் அவர்களிடம் தனது கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்கட்டும் என்று விவாதத்தை கூறுகிறார், இதனால் உண்மையில் அங்கு நடப்பது என்ன..? ஒரு வேலை ரசாயனம் தான் தூவப்படுகின்றதா..? அல்லது சாதாரண நிகழ்வை அசாதாரணமாக எண்ணி அவர் கூறுகிறாரா..? என்பது தெரியவில்லை.