கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை அமோகம்..!! ரூ.1.5 கோடி அபராதம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலந்த ஏழு மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு FSSA வருவதாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக் குழு 764 கடைகளை மூடி குற்றவாளிகளிடம் இருந்து 1. 50 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள சின்ன சின்ன கடைகளில் கடத்தல் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர சோதனைகள் ஈடுபட்டு வந்தனர்.

கோவை மாநகராட்சி எல்லைகளான பீளமேடு,கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர் எஸ் புரம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், காளப்பட்டி, அவிநாசி ரோடு, காந்திபுரம், வடவள்ளி, ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 23 சிறப்பு குழுக்கள் கண்காணித்து வந்தனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி. சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர், எஸ் எஸ் குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ,ஆனைமலை மற்றும் வால்பாறை ஆகிய கிராமங்கள் உள்ளன.

அக்டோபர் 29 2003 முதல் ஜூன் 3 2024 வரை 6,430 கடைகளில் சிறப்பு குழுக்கள் சோதனை மேற்கொண்டு உள்ளனர், அதில் 764 கடைகள் சட்டவிரோதமான புகயிலை பொருட்கள் விற்பனை செய்ததை தொடர்ந்து அந்த சோதனையில் சுமார் 36.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3483.37 கிலோ கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமிக்கப்பட்ட அதிகாரி கே தமிழ்செல்வன் கூறுகையில் “ பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே இது சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கவோ பதுக்கி வைக்கவோ  வேண்டாம் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”, என்று கூறியுள்ளா.

ர் ஜனவரி 4 2023 வரை 215 முதல் முறை குற்றவாளிகளும் ரூ.10. 75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, பின் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மற்றும் தண்டனைகள் திருத்தப்பட்டன ஜனவரி 4க்கு பின் புதிதாக திருத்தப்பட்ட 541 முதல் முறை குற்றவாளிடம் இருந்து ரூ1.35 கோடி வசூல் செய்துள்ளோம். சட்டவிராத பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவரது கடையை 15 நாட்களுக்கு மூடப்படும் என்றும் சட்டம் உள்ளது. இதே போல் இரண்டாவது முறையாக 50 ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் மற்றும் அவர்களின் மீண்டும் தவறு செய்த நபரிடம் 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் மூன்றாவது குன்றத்தில் யாரும் சிக்கவில்லை என்றும் தொடர்ந்து மூன்றாவது முறை தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது கடை மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

கோடை வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை சாகுபடி..!! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!!

Read Next

பருவ மழையால் நாசமடைந்த நெற்பயிர்கள்..!! மதுரை விவசாயிகள் வருத்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular