
மடோன் அஸ்வின் இயக்கி உள்ள மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கோலிவுட், டோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் சிவகார்த்திகேயன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தில் இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து மாவீரன் படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், மாவீரன் படத்திற்கு தரமான ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். #SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், முதன்முறையாக இந்தியில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்துள்ளதாம். இதனை மாவீரன் தெலுங்கு புரோமோஷனில் கலந்து கொண்ட நடிகர் அதிவி சேஷ் கூறி சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ வைரலாகத் தொடங்கியுள்ளது.
ரஜினி, கமலுக்குப் பின்னர் தற்போதைய நடிகர்களில் தனுஷும், விஜய் சேதுபதியும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் விரைவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முதல் இந்தி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.