சக்கரவள்ளி கிழங்கில் சப்பாத்தி செய்து ருசி பார்ப்போம் வாங்க..!!

இந்த சப்பாத்தி செய்வதற்கு முதலில் 1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கை சுத்தம்செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதேதோலை உரித்து ஒரு மேசர் வைத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

மசித்த உடன் இந்த கிழங்கிற்கு 1/2 கப் கோதுமை மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஓமம், சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கிழங்கில் இருக்கும் ஈரப்பதத்திலே அதைநன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து, அதன் மேலே லேசாக எண்ணெய் தடவி அரைமணி நேரம் இந்த மாவை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து மாவை உங்களுக்கு தேவையான அளவில் சின்ன சின்னஉருண்டைகளாக பிடித்து, எப்போதும் போல சப்பாத்தி கட்டையில் தேய்த்த பிறகுஅடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன், ஒவ்வொரு சப்பாத்தியாக திரட்டிபோட்டு எண்ணெய் அல்லது நெய் உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்து சப்பாத்தியை சுட்டு எடுத்து விடுங்கள்.

Read Previous

இல்லற வாழ்க்கையை இனிமையாக வழிநடத்தி செல்ல இதை செய்யுங்க..!!

Read Next

சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் பதவியேற்றார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular