சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் – ஸ்டாலின்..!!

மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் கிம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க அறிவிப்பு செய்திருந்தும் தமிழ்நாட்டின் விடுதலைப்போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பட்டமாளிப்பு விழாவில் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சங்கரய்யா மறைவு: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!!

Read Next

தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular