சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு..!! படக்குழு அறிவிப்பு.!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகள் வரை காமெடி திரைப்படங்களில் பெரும் அளவு கவனம் செலுத்தி நடித்து வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியினை தொடர்ந்து தற்பொழுது முக்கிய கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் வெற்றிமாறனின் எழுத்தில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருடன்” இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர்.

மே மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிட்டுள்ளதாக திரைப்பட குழுவினர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான “அயோத்தியா”  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மேலும் பல தரப்பிலும் பாராட்டுகளை குவித்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது அவர் வெற்றிமாறனின் எழுத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Read Previous

புதிய தொடரில் களமிறங்கும் நடிகை ரேஷ்மா..!! எந்த தொலைக்காட்சி, யாருக்கு ஜோடியாக தெரியுமா.?

Read Next

பேரழகு.. யங் ஹீரோயின்கள் ஓரம்போகணும்.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்கவைத்த நடிகை ஸ்ரீ தேவி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular