
துருக்கியில் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைந்த 35 ஆயிரம் பேர் கைது. துருக்கி அரசு அதிரடி.
துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடி புகுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. இதை தடுப்பது பெரும் சிக்கலான ஒன்றாக இருப்பதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம் பெயர்ந்து உள்ளனர். அவர்களை கைது செய்த துருக்கி அரசு 16 ஆயிரத்து 18 பேரை நாடு கடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
துருக்கியில் திருட்டுத் தனமாக குடியேறு பவர்களை தடுக்கும் வகையில் கடற்கரை பகுதிகளில் சுற்றுலாப் படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இஸ்தான் புல் நகரில் நடமாடும் புலம் பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலக மையங்கள் நிறுவப்பட்டு உள்ளது.
இந்த மையம் மூலமாக புலம் பெயர்ந்தோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்து உள்ளார்.