
அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், பி வி ரமணா மற்றும் கே சி வீரமணி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை துவங்குவதற்கு ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பான ஆவணங்கள் முழுமையாக அனுப்பப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் வரவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த நிலையில் ஆளுநரின் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. கோப்புகளை பெற்றுக்கொண்டு பெற்றதற்கான ஒப்புதலில் கையெழுத்தும் போட்டி விட்டு ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறுவது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக விமர்சனம் செய்துள்ளது அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பத்துறை தனது twitter பக்கத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி மீது சொத்துக் குறிப்பு வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் வழக்கில் வேகம் காட்டும். ரகுபதி எட்டு வருடமாக நிலுவையில் உள்ள தனது வழக்கையும் வேகப்படுத்த முயலாதது ஏன்..? என்று சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டாமா..? என விமர்சனம் செய்துள்ளார்.