சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பாஜக புள்ளியின் உறவினர் மரணம்..!! கண்ணீரில் குடும்பத்தினர்.!!

விவசாய விலை நிலத்தில்  சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பாஜக செய்தி தொடர்பாளரான பிஜேந்திர் நெஹ்ரா இவரின் மருமகன் உறவு முறை கொண்ட இளைஞர் பிரசாத்( வயது 21). இவர் அங்குள்ள பல்லப்கர், சாகர்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி உள்ள அந்த கிராமத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது பயிர்களை காட்டு பன்றி போன்ற காட்டு மிருகங்களிலிருந்து பாதுகாப்பதற்காக மின் கம்பிகளை விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று பிரசாத் தனது உறவினர் யாசினுடன் (வயது 18) இருசக்கர வாகனத்தில் வயல்வெளியில் உள்ள பால்பண்ணைக்கு பால் சேகரிக்க சென்றுள்ளார். இவர் வயல்வெளிக்கு சென்ற போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து மின்சாரம் பாச்சப்பட்டு இருந்த மின்சார வேலியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞர் யாஷீன் மற்றும் பிரசாத் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசாந்த்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சதுர் காவல் நிலைய அதிகாரி பிரேத பரிசோதனைக்கு பின் பிரசாந்தின் உடலை அவரின் குடும்பத்தில் ஒப்படைத்துள்ளனர். விவசாய குடும்பத்தை சார்ந்த பிரசாந்த் டிப்ளமோ பயின்று வருகிறார். அவரின் குடும்பத்தை பிரசாத் கவனித்து வந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார். இரண்டு மகன்களில் ஒரு மகனை இழந்த பிரசாத்தின் தந்தை சந்திர பான் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். குடும்பத்தினர் அவரை ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர் .அரசின் எச்சரிக்கையை மீறி  சட்டத்திற்கு புறம்பாக மின்சார வேலி அமைத்து உயிர் பலி ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றி..!! கருத்துக்கணிப்பில் திடுக்கிடும் தகவல்..!! பாஜக அதிர்ச்சி..!!

Read Next

சாலையோர கடையில் சோலா பூரியில் பொரித்து எடுக்கப்பட்ட பல்லி..!! வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular