இதுவரை நாம் அனைவரும் கோதுமை கஞ்சி, அரிசி கஞ்சி, ரவை கஞ்சி ஆகியவை கேள்விப்பட்டிருப்போம், அதை நாம் குடித்திருப்போம். ஆனால் முதன்முறையாக பஞ்சமுட்டி கஞ்சி எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி
- உளுந்து
- சிறு பயறு
- துவரம் பருப்பு
- கடலை பருப்பு
- சுத்தமான துணி
- தண்ணீர்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பச்சரிசி, உளுந்து, சிறு பயறு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, ஆகிய பொருள்களை தனித்தனியாக வறுத்து எடுத்து அவற்றை ஆறிய பிறகு ஒன்றாக கலந்து சுத்தமான துணயில் போட்டு கட்டி வைக்க வேண்டும்,
தண்ணீர் ஊற்றி தயார் செய்த துணி மூட்டை பையை நீரில் முழுகும்படி போட்டு நன்கு வேக வைக்கவும், துணி முடிசில் உள்ள சத்துக்கள் நீரில் இறங்கி நீர் கலங்கலாக தெரிய வரும்போது துடிப்முடிச்சை அகற்றிவிட்டு தெரிந்தவுடன் அந்த கஞ்சியை உட்கொள்ள வேண்டும்.