
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடாவிற்கு கொரியர் மூலம் போதைப் பொருளை அனுப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பஞ்சாப்பை சேர்ந்த சுக்விந்தர் சிங் என்பவர் பஞ்சாபில் இருந்து கனடாவிற்கு கொரியர் மூலமாக பார்சல் ஒன்றை அனுப்ப வந்திருந்தார். அந்த பார்சலை கொரியர் நிறுவன அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது அதில் சந்தேகப்படும் வகையில் பொருள் இருந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதிலிருந்த சத்துமாவிற்குள் சிறிய பாக்கெட்டில் போதை பொருள் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து பார்சலை அனுப்பிய சுப்வீந்தர் சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பார்சலை அவர் கனடாவில் உள்ள வரிந்தர் சிங் என்பவருக்கு அனுப்பி இருக்கிறார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.