சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை..!! குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது..!!

ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து,வெந்தயம். கடலை பருப்பு, பயறு, கொள்ளு அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து பிளேண்டரில் போட்டு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொர கொரவென்று அறைக்கவும். முழூ கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அறைக்கவேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.

தேவையான உப்பு சேர்த்து கிளறவும், கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளற. மாவு அடை செய்ய தயார்.

தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை தோசை செய்க. அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான அடை தோசை தயார்.

எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்த்து பரிமாறலாம். நான் சாம்பார், தக்காளி சட்னி கூட பறிமாறினேன்.

Read Previous

சோம்பேறி சிக்கன் செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

படித்ததில் ரசித்தது: எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை வாழ இவைகள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular