சத்து நிறைந்த பருப்பு புட்டு எப்படி செய்வது..!!

புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு புட்டு. எப்படி செய்வது தெரியுமா.

மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு
  2. கடலைப்பருப்பு
  3. பாசிப்பருப்பு
  4. புழுங்கல் அரிசி
  5. உப்பு
  6. சர்க்கரை
  7. ஏலக்காய்த்தூள்
  8. முந்திரி
  9. தேங்காய்
  10. நெய்

செய்முறை: முதலில் பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து ௨ மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி அரைத்து வைத்து உள்ள மாவை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேகவத்த பருப்பை எடுத்து புட்டு போல உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொருவாணலியில் நெய் ஊற்றி முந்திரி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். வேக வைத்து உதிர்த்து வைத்து உள்ள புட்டை நெய் வறுத்த முந்திரியுடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சர்க்கரை பாகு ஏலக்காய் பவுடர் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால் அட்டகாசமான பருப்புக் புட்டு வீட்டிலேயே தயாராகி விட்டது.

Read Previous

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை நான்கு பேருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி..!!

Read Next

முதல் பரிசை தட்டிச்சென்ற காவல்துறை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular