சத்யராஜ் எங்களை பொறுத்தவரை உண்மையான ஹீரோ தான்..!! செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி..!!

நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும், அதில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களும் பேசியது “சத்யராஜ் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் எங்களை பொறுத்தவரை அவர் உண்மையான ஹீரோதான். ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்து தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்.

பிரதமர் நரேந்திர மோடியின் கதையில் சத்யராஜ் நடிக்கலாம். அது அவருடைய தொழில், அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்து காட்ட வேண்டும். மோடிக்கு இருக்கும் உண்மையான பாசிச முகத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். மக்களுக்கு எதிராக பேசும் மோடி, ராமரை கையில் வைத்துக்கொண்டு அரசியல் பேசும் மோடி, இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஒற்றுமையாக இருப்பதை எல்லாம் மறைத்து பிரிவினைவாதத்தை பேசுகின்ற மோடி என மோடியின் பல்வேறு குணாதிசயங்கள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசத்திற்கு மோடி செய்த துரோகங்கள் என்று அனைத்தையும் அந்த படத்தில் சத்யராஜ் பேச வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழகத்தில் கன முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Read Next

அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்..!! வாக்குறுதியை வாரி வழங்கிய ராகுல் காந்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular