
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலை இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மூலம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. இவர்களது பத்தாண்டு கால ஆட்சியில் நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், கேஸ் ,பெட்ரோல் மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் எண்ணமாய் உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக காங்கிரஸ் தலைமையில் திமுக உட்பட இந்தியாவின் இடதுசாரிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்து பேசிய கருத்து இந்தியாவில் பெரும் சர்ச்சை படுத்தியது. இந்தியாவின் வட மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
மேலும் இவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ரூ. 10 கோடி கொடுப்பேன் என்று சாமியார் ஒருவர் பகிரங்க பேட்டி அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக எம்பி கூட்டத்தில் சனதானம் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டு உள்ளார் முதல் மு க ஸ்டாலின்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரவுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களித்து அவர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்னவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.