இன்று துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இருக்கு அமைச்சராகவே இருக்க தகுதி இல்லை என்றும் அவர் துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்படுத்துவதற்கு தகுதியற்றவர் என்றும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் அமைச்சராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் கூறுகையில் துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்றும் அவ்வளவு ஏன் அவர் அமைச்சராக இருப்பதற்கு கூட அவருக்கு பக்குவம் கிடையாது என்றும் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சனாதன தர்மத்தை இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கூட கேட்காதவர் உதயநிதி ஸ்டாலின், அப்படி இருக்கையில் அவர் எப்படி முதல்வர் ஆகலாம் அவருக்கு முதல் வாரம் ஆகும் தகுதியும் கிடையாது அமைச்சராக இருப்பதற்கான தகுதியும் பக்குவமும் கிடையாது என்று அவர் செய்தியாளரிடம் அவர் பேட்டியளித்துள்ளார்..!!




