பெரும்பாலான மக்கள் தெய்வங்களை அன்றாட வழிபட்டு வருவதுண்டு அதிலும் சிலருக்கு தோஷங்கள் நிவர்த்தியாக வேண்டும் என்று நாகம், காலபைரவர், சனீஸ்வரன் இப்படி பல கோவிலுக்கு தங்களின் தோஷங்கள் நீங்குவதற்கு சென்று வருவதும் உண்டு.
அப்படி இருக்கையில் சனிக்கிழமையில் வாங்கக்கூடாத சில பொருட்கள் உண்டு அவை சனிபகவானுக்கு ஆகாத பொருட்களாகவும் நம்பப்படுகிறது, சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்க கூடாது இரும்பு பொருட்கள் வாங்குவதனால் கடன் அதிகரிக்கும் இரும்பு பொருட்களை தானமாக வழங்குவதனால் கடன் பிரச்சனை நிவர்த்தியாகி சுமூகமான வாழ்க்கை நிலவும், சனிக்கிழமை அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் ஆரோக்கியமும் தோஷங்களும் நீங்கும் என்று ஐதீகம் கூறுகிறது ஆனால் சனிக்கிழமை அன்று கடைக்கு சென்று எண்ணெய் வாங்க கூடாது, சனிக்கிழமையில் வெளியில் இருந்து எண்ணெய் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் வீட்டில் நஷ்டம் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது..!!