
சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமைகளில் கண்டிப்பாக வீட்டில் இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் உணவு இடியாப்பம் தேன் கலந்து வைப்பது மிகவும் நல்லது. மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லங்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நம்மால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். பசு மாட்டிற்கு கருப்பு உளுந்து உணவு தானம் கொடுப்பது மிகவும் நல்லது. தெருநாய்களுக்கு உணவளிப்பதும் மிகவும் நல்லது. பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் இனிப்பு உணவு திணை சாமை வைப்பது மிகவும் நல்லது. தலையில் சிறிது நல்லெண்ணெய் வைத்து குளிப்பது நல்லது நல்லெண்ணெய் சேர்த்த உணவு சமைப்பது நல்லது. புளியோதரை புலி குழம்பு மற்றும் கொள்ளு சுண்டல் சமைப்பது நல்லது. கருப்பட்டி நொங்கு பதநீர் பழைய சோறு ஊறுகாய் மோர் மிளகாய் சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலை உருண்டை எள்ளுருண்டை நாவல் பழம் கடவுளுக்கு நெய் வைத்தியம் செய்வது நல்லது. வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.