
- சன்னா ஆலு குருமா
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2
சன்னா – 50 கிராம்
மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 3
தேங்காய் – கால் மூடி
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
1.கால் மூடி விழுதாக தேங்காயை அரைக்கவும். கடைசியில் 3 டீஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு வைக்கவும்.சன்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து சுண்டலுக்கு போல் அவித்துக் கொள்ளவும்
2.கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை தாளிக்கவும்.
அதனுடன் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
3.அடுத்து நான்காய் நறுக்கிய உருளைக்கிழங்கு அவித்த சன்னா சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் தேங்காய் மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் கீழே இறக்கவும். சன்னா ஆலு குருமா தயார்.