சன்னி லியோன் படத்துடன் ஹால் டிக்கெட்..!!

உத்தரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான அனுமதி அட்டை நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தேர்வு நேற்று நடைபெற்று முடிந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வர் அளித்த புகாரின் பேரில், கண்ணாஜ் சைபர் செல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதே போல் கடந்த ஆண்டுகளில் அனுமன், ராமர், நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரது படங்கள் அச்சிடப்பட்ட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்..!!

Read Next

யுபிஐ சேவைகள் கிடைக்கும் நாடுகள் இவைதான்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular