18 வித குணங்களில் நல்லவற்றை பின்பற்றியும் தீயவற்றை களைந்தும் வாழ்க்கை படியில் ஏறிச் சென்றால் இறைவன் அருள் கிடைக்கும் என்பதை 18 படியின் தத்துவம்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொன்னாள் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த 18 படிகளும் காரணமும் தத்துவமும் உண்டு, காமம் : பற்று உண்டானால் பாசம் கோபம் மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது, குரோதம் : கோபம் குடியை கெடுத்து கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும், லோபம் : பேராசைக்கு இடம் கொடுத்ததால் இருப்பதும் போய்விடும் பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடைய முடியாது, மதம் : யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அடித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புகிறார்களா அது போல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான், மாத்ஸர்யம் : மனதில் பொறாமையை நிலை நிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும், டம்பம்: (வீண் பெருமை) அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது, அகந்தை : தான் தான் என் அகந்தைக் கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோக சுமை, சாத்வீகம் : விருப்பு வெறுப்பு இன்றி தர்மம் செய்தல் வேண்டும், ராஜஸம் : அலங்காரத்தோடு கர்மம் செய்தல் கூடாது, தாமஸம் : அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது, ஞானம் : எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு, அஞ்ஞானம் : உண்மை பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள், கண் : ஆண்டவனை தரிசித்து ஆனந்தம் அடைய வேண்டும், காது : ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும், மூக்கு : ஆண்டவனின் சன்னதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர வேண்டும், நாக்கு : புலால் உணவை தவிர்க்க வேண்டும், வாய் : கடுஞ்சொற்கள் பேசக்கூடாது, மெய் : இரு கரங்களால் இறைவனை கைகூப்பி தொழ வேண்டும் கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும் உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும், இந்த 18 வித குணங்களில் நல்லவற்றை பின்பற்றியும் தீயவற்றை களைந்தும் வாழ்க்கை படியில் ஏறி சென்றால்தான் இறைவன் அருள் கிடைக்கும், இதையே சபரிமலை தர்மசாஸ்தாவின் 18 படிகள் உணர்த்தும்…!!




