
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்கான நாளை மறுநாள் நடை திறக்கப்பட உள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுகின்றது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நிர்மலய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும், மாலை ஐந்து மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாரதனை அபிஷேகம் நடைபெறும்.
இந்நிலையில் வைகாசி மாதம் மண்டல பூஜை வருகின்றமே 15ஆம் தேதியின் முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த ஐந்து நாட்கள் கோவில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. இந்த பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது முன்னிட்டு கேரளா அரசு போக்குவரத்து சார்பில் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளது.