சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக செகந்திராபாத்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்..!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் சீசனைக் கருத்தில் கொண்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் -ரயில் எண்.07121 செகந்திராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஜனவரி 14, 2024 அன்று மதியம் 14.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 23.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

ரயில் எண்.07122 கொல்லம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் கொல்லத்தில் இருந்து 16 ஜனவரி 2024 அன்று மதியம் 02.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

பெட்டிகள் விவரம்: ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி 2-அடுக்கு, ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் பெட்டிகள்.

நிறுத்தங்கள்: செகந்திராபாத், செர்லபள்ளி, போங்கீர், ஜங்கான், காசிப்பேட்டை, வாரங்கல், மஹ்பூபாபாத், டோர்னக்கல், கம்மம், மத்திரா, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பூர் கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர் மற்றும் மாவேலிக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

ரயில் எண்.07121 செகந்திராபாத் கொல்லம் சிறப்பு ரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் கீழே தரப்பட்டு உள்ளது.

(15.01.2024 அன்று) சேலம் ஞாயிறு-11.38/11.40 மணி; ஈரோடு – 12.40/12.50 மணி; திருப்பூர் 13.28/13.30 மணி; கோவை – 14.27/14.30 மணி.

ரயில் எண்.07122 கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் வந்து செல்லும் நேரம்

(16.01.2024 அன்று) கோவை – 11.20/11.25 மணி; திருப்பூர் 12.50 / 12.55 மணி; ஈரோடு 13.35 / 13.45 மணி; சேலம் ஜன. 14.47/14.50 மணி.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Read Previous

சென்னையில் கிராமிய கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திய கனிமொழி எம்.பி..!!

Read Next

கிளீன் ஷேவ் லுக்கில் விஜய்..!! வைரலாகும் மாஸ் செல்ஃபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular