சப்போட்டா பழத்தில் இவ்வளவு பயன்கள் அடங்கியுள்ளதா..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

சப்போட்டா பழம் இந்த பழம் அனைவருக்கும் தெரிந்தாலும் பலரும் சாப்பிடாத ஒரு பழம் சப்போட்டா பழம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த சப்போட்டா பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகளை பார்த்தால் நீங்களே தினமும் ஒரு பழம் சாப்பிடுவீர்கள். அந்த அளவிற்கு இந்த சப்போட்டா பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு கூட சப்போட்டா பழம் நல்ல மருந்தாக அமைகிறது .

சப்போட்டா பழ ஜூஸ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்பளர் சப்போட்டா பழ ஜூஸ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.

சப்போட்டா பழத்துடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழ ஜூஸ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வர, காசநோய் குணமாகும்.

இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.

இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

சப்போட்டா ஜூஸ் உடன், எலுமிச்சைசாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

Read Previous

மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular