
தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவர் தமிழில் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனர் ஆனார்.
இந்த படத்திற்கு பின் ஆடுகளம் திரைப்படத்தை இயக்கி தேசிய விருதையும் வென்றார். மேலும் இவரது இயக்கத்தில் வெளிவந்த அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற திரைப்படங்களும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளி வந்த விடுதலை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விடுதலை திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் வெற்றிமாறன் தனது அரசியல் நிலைப்பாடுகளை ஓபன் ஆக பேசி வருகின்றார். இதன் படி தற்போது “சமத்துவம் தான் எனது நிலைப்பாடு. சமத்துவத்திற்கு எதிராக இருப்பவர்களை எப்போதுமே எதிர்த்து நிற்பேன்” என்று பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.