சமூகநீதியின் நாயகன் ஈ.வே இராமசாமி என்ற பெரியார் நினைவு தினம் இன்று.!!

பெண் விடுதலை, சமூக நீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல்வேறு விஷயங்களுக்காக போராடி தனது வாழ்நாட்களை அர்ப்பணித்தவர் ஈ. வே ராமசாமி என்கின்ற பெரியார்.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி  1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெரியார், மக்களிடம் நீங்கா கரையாக காணப்பட்ட மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் அனைத்து சமுதாயமும் சாதி, மத கருத்துகளை கலைந்து ஒற்றுமையாக வாழவும், மூடநம்பிக்கையை ஒழிக்கவும் பல்வேறு மாநாடுகளை இவர் நடத்தி உள்ளார்.

தமிழ் சமூக மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களை கடைபிடிக்க அவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தலைவர் பெரியார். இவர் நினைவு நாள் இன்று. இவர் அதை இதே நாளில் கடந்த 1973 ஆம் ஆண்டு தனது 94-வது வயதில் மரணம் அடைந்தார். இன்றோடு அவர் மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று சுதந்திரத்திற்கு பின்னால் நாம் அனுபவிக்கும் பல்வேறு சுயமரியாதை விஷயங்களுக்கு பெரியாரின் விதை அளப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சென்னையில் பேரதிர்ச்சி.!! திருநங்கை காதலனின் ரகசியம் அறிந்து காதலை கைவிட்ட இளம்பெண்..!! பிறந்தநாள் பரிசு தருவதாக தீர்த்துக்கட்டிய பயங்கரம்..!!

Read Next

சென்னை கடலில் கரையொதுங்கும் நச்சுத்தன்மை கொண்ட நீல டிராகன்; புயலால் நடந்த சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular