உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா மாவட்டத்தில் வாசித்து வருபவர் ராகுல். இவரின் நண்பர் சூரஜ். இவர்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக இரண்டு சிறுமிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சகோதரிகளாவார், இவர்களுடன் பழகி வந்த இளைஞர்கள் சம்பவ தினத்தன்று தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று சிறுமிகளை தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளனர் ,அங்கு இருவருக்கும் குடிக்க குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டது, இதை அறியாது குடித்த சிறுமிகள் இருவரும் மயங்கி உள்ளனர், பின் இளைஞர்கள் இருவரும் சிறுமிகளை பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்த நிலையில் அதை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி இரு பத்து லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
10 இலட்சம் பணம் பறித்த கயவர்களின் தொல்லை தொடர்ந்ததால் சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தனர், இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.