
சமைக்கும்போது இந்த குறிப்புகளை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு சமைச்சீங்கன்னா உடல் ஆரோக்கியமாக இருக்கும்..!!
கோதுமையில் பரோட்டா செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம் கலந்து செய்தால் சுவையாகவும் இருக்கும் எளிதில் ஜீரணமும் ஆகும். ரசம் வைக்கும் போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கை இலைகளை தூவி இறக்க அது தனி சுவையும் தரும் உடலுக்கும் மிகவும் நல்லது. சுண்டக்காய் குழம்பு செய்யும் போது நல்லெண்ணெய் விட்டு தாளிப்பு செய்தால் சுவையும் மனமும் அள்ளும். நல்லெண்ணெய் சேர்ப்பதால் உடலும் குளிர்ச்சி பெறும். வெண்டைக்காய் கத்தரிக்காய் காரக்குழம்பு செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும். சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க உடலில் உள்ள கொழுப்பு குறைந்து கொழுப்பு சேராமல் இருக்கும்.