சமையலுக்கு பயன்படும் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் பூண்டு. இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த பதிவில் நாம் காண்போம். பூண்டு மிகச்சிறந்த ஒரு கிருமி நாசினி. அதிலும் மலைப்பூண்டை காட்டிலும் சிறு பூண்டு தான் சத்துக்களில் சிறந்து விளங்குகின்றது.
பூண்டில் உள்ள அலிசின் என்னும் ஆர்கனோ சல்பர் பொருள் ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. கொழுப்பு ரத்த நாளங்களின் படிவதால் ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்லாமல் மாரடைப்பு பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. பூண்டு கொழுப்பு படிதலை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றல் தரும் உணவுகளில் ஒன்றாக பூண்டும் விளங்குகிறது. சுவாசக் கோளாறுகள், அஜீரண கோளாறுகள், ஒவ்வாமை, சளி , காய்ச்சல் முதலியவற்றிற்கு இந்த பூண்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இரும்புச்சத்து மற்றும் துத்தநாகத்தின் அளவு உடலில் உறிஞ்சப்படுவதை பூண்டு அதிகரிக்கிறது.