சமோசாவை இப்படி செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்..!! சுவையான செய்முறை இதோ..!!

நம் அனைவருக்கும் சமோசா என்றால் நிச்சயமாக பிடிக்கும். ஆனால் அதை கடையில் வாங்க அனைவரும் யோசிப்பார்கள். கடையில் வாங்கும் சமோசாவிற்கு பதிலாக வீட்டிலேயே சத்தாக சமோசாவை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 200 கிராம்
வெங்காயம் – இரண்டு உருளைக்கிழங்கு – 2
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப எண்ணெய், உப்பு – தேவையான அளவு சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை :

மைதா மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைத்திருக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி குட்டி குட்டியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை சிறிதாக வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து எண்ணெய் விட்டு சீரகம் வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கடைசியாக மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிட்டு இறக்கி விடவும்.

அந்த மாவை தட்டி முக்கோண வடிவில் வெட்டி சமோசா போல் பிடித்து மசாலாவை அதனுள் வைத்து மூடி சூடாக இருக்கும் என்னையில் பொரித்து எடுத்தால் சுவையான சமோசா வீட்டிலேயே தயார்.

Read Previous

காலையில் எழுந்தவுடன் சுடுதண்ணீரை குடித்தால் எத்தனை நன்மைகள் தெரியுமா..!! அனைவரும் இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

Read Next

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular