சம்பளமே வேண்டாம்.. பாதி காசு வாங்காமலேயே நடித்த அமலா.. புகழ்ந்து பேசிய பிரபலம்..!!

பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அமலா. 1986 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய மைதிலி என் காதலி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பிரபலமானார். அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. பின்னர் அதே ஆண்டில் விஜயகாந்த் உடன் இணைந்து ஒரு இனிய உதயம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் வேலைக்காரன், வேதம் புதிது இது, ஒரு தொடர்கதை, கூட்டுப்புழுக்கள், பேசும் படம் ஆகிய திரைப்படங்கள் 1987 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதில் கூட்டு புழுக்கள் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகர் ரகுவரன் அமலாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அமலாவிடம் கூறிய போது அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

காதல் தோல்வி ரகுரனை மன அழுத்தத்தில் தள்ளியது. இதனை கூட ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருப்பார். அதைத் தொடர்ந்து வெற்றி விழா, மாப்பிள்ளை, கற்பூர முல்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் . தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வளம் வந்த இவர் நாகார்ஜுனவுடன் நட்பு ஏற்பட்டது. தெலுங்கில் சிவா என்ற திரைப்படத்தில் நாகார்ஜுனா அமலா இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட அமலா அகில் அக்கினேனி என்ற மகனை பெற்றெடுத்தார். இதைத்தொடர்ந்து எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு கணம் என்கின்ற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி சினிமாவில் மிகப் பிரபல நடிகையாக வளம் வந்த அமலா புதுப்பாடகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தை இயக்கியவர் எஸ் தாணு. இதில் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ராதாரவி, சின்னி ஜெயன், சார்லி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் ஒரு பரதநாட்டிய கலைஞராக நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் நடிகை அமலா நடித்துக் கொண்டிருந்தபோது முதலில் அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் தான் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை மொத்தம் 4 லட்சம். ஆனால் அட்வான்ஸ் தொகையுடனே படத்தை நடித்து முடித்து விட்டார். மீதி பணத்தை கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார். இது போன்ற ஒரு படத்தில் நடிப்பது எனது பாக்கியம். என்ன ஒரு டெடிகேஷன் ஆன இயக்குனர் இப்படிப்பட்டவரை பார்ப்பது இதுதான் முதல் முறை. எனக்கு மீதி சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்போதும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பாராட்டி இருந்தார் எஸ் தாணு.

Read Previous

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் டிகிரி தேர்ச்சி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Read Next

உங்க காதுகளில் இந்த அறிகுறி தெரியுதா?.. புற்றுநோயாக இருக்கும் ஜாக்கிரதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular