
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கூடுதலாக ரூ 10 வசூல் செய்யப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்து வருகின்றது. ஆனால் அரசு இது குறித்த குற்றச்சாட்டை இன்று வரை ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் அவ்வப்போது களங்களில் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளரான குடிமகன் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலான ரூ 10 பணம் வாங்குவது ஏன்..? என்று குடிமகன் ஒருவர் கேள்வி கேட்டார்,சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குடிமகனை கண்ணம் பழுக்க பலர் என அடித்துவிட்டு அங்கிருந்து அவரை விரட்டி அனுப்பியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காவல்துறை அதிகாரி குடிமகனை தாக்கியதற்கு ஒருபுறம் கண்டனம் எழுந்தாலும், மதுபானம் குடிப்பதும், விற்பனை செய்வதுமே நியாயப்படி தவறு இதில் யாரை குறை சொல்வது என்று சிலர் புலம்பி வருகின்றனர்.