
சரக்கு ரயில் விபத்து..!! 5 பெட்டிகள் தடம் புரண்டன..!! மீட்பு பணி தீவிரம்..!!
மேற்குவங்கத்தில் சரக்கு ரயில் இன்று (ஆகஸ்ட் 09) காலை தடம் புரண்டது. எரிபொருள் எண்ணெயுடன் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது. மால்டாவில் உள்ள ஹரிச்சந்திரபூர்-2 பிளாக்கில் உள்ள குமேத்பூரில் என்ஜிபியிலிருந்து கதிஹார் செல்லும் வழியில் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. கதிஹார் கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.