சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்..!!

டீ, காபியை மக்கள் அதிகமா விரும்புறது உண்மை தான். அதுக்காக எந்த இடத்துலயும் கடையை போட்டு சம்பாதிச்சிட முடியாது.

 

தொழில் பற்றிய முன்அனுபவமே இல்லாம 5லட்சம் கட்டினா அவங்களே கடை செட்டப் போட்டு நம்மளை கல்லாபெட்டில உக்கார வச்சிடுவாங்கன்னு ஒரு ஆர்வத்துல நிறைய பேர் இதுல இறங்குறாங்க.

 

tea boy, tea time, tea break ன்னு ஏகப்பட்ட நிறுவனங்கள் Franchise பன்னி தராங்க. ஓப்பன் பன்னி தந்துட்டு போய்டுவாங்க. வாடகை 20-25K , ரெண்டு பேர் சம்பளம் 30K, EBக்கு 5K ன்னு மாசம் 50ஆயிரத்துக்கு மேல மீதி இருந்தா தான் ஓனருக்கு பணம் கிடைக்கும். இதுல மாசம் 2000-3000 Franchise க்கு கமிசன் கொடுக்கனும்.

 

தினம் 3000 லாபம் பாக்கனும்ன்னா குறைந்தது 400பேர் டீ குடிக்க வரனும். ஒரு தெருல ஒரு கார்னர்ல ஒரே ஒரு டீ கடை இருக்கும் சமயத்துல 400பேர் டீ சாப்பிட வர்ரது சாதாரணம். ஆனா இப்போ அப்படி இல்லை.

 

ஒரு தெருல வரிசையா 20கடை இருக்குற இடத்துல குறைந்தது 5கடை டீ கடை தான் இருக்கு. அப்புறம் 400 கஸ்டமர் வர்ரது எப்படி சாத்தியம். கடை பில்டிங் ஓனருக்கும், EB காரனுக்கும், Franchise காரனுக்கும் சம்பாதிச்சி கொடுத்துட்டு கடை ஓனர் லாபமே இல்லாம தான் நிக்கனும்.

 

எங்க ஏரியால Tea boy ன்னு கடை ஒரே வாரத்துல பக்கத்து பக்கத்து தெருவுலயே போட்ருக்காங்க. வேற வேற ஓனர். ஏற்கனவே பழைய சின்ன டீ கடைகள் வேற அங்க இருக்கு. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ டீ கடை வச்சிட்டு யாரும் திருப்தியா சம்பாதிக்க முடியாது.

 

Franchise காரன் இதுவரை 300 Outlets, 500 outlets ன்னு போய்கிட்டே இருப்பான். அவனுக்கு ஒரு கடைக்கு 2000 கமிசன் ன்னா கூட 300 கடைக்கு மாசம் 6லட்சம் லாபம் ஆச்சு. அதனால 5லட்சத்தோட யாரும் பிசினஸ் பன்ற ஐடியால இருக்காங்கன்னு தெரிஞ்சாலே பேசி கடையை போட வைக்க தான் அவங்க முயற்சி பன்னுவாங்க.

 

வியாபாரத்துக்கு நல்ல இடமா என்னன்னு பாத்து, உங்க பேர்லயே உங்க டிசைன்லயே கடையை ஆரம்பிக்கிறது தான் பெஸ்ட். எனக்கு தெரிஞ்ச ஒருசிலர் Franchise ன்னு போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.

 

Franchise இல்லாம சொந்தமா டீ ஷாப் வச்ச ஒருத்தரும் லாபமே இல்லாம தினமும் என்கிட்ட பொழம்புவார். 7லட்சம் செலவு பன்னி Interior work எல்லாம் நல்ல டிசைனா பன்னி ஆரம்பிச்சார். ஆனா வாடகை கொடுக்க கூட லாபம் நிக்கலன்னு சொல்வார். 9மாசம் ஆச்சு இன்னும் பிக்கப் இல்லை.ஆனாலும் கடையை விடவும் தயக்கமா இருப்பதாக சொன்னார்..

 

பிசினஸ் ஆரம்பிக்கும் போது இருக்குற ஆர்வமும் தைரியமும், பிசினஸ் சரியா போகலன்னு ஆறு மாசத்துலயே தெரியும் போது அதை இடம் மாத்தவோ, கைவிடவோ செய்யவும் தைரியம் இருக்கனும்.

 

நாலு பேர் என்ன நினைப்பாங்க, பிசினஸ் லாஸ் ஆகிருச்சே இப்படியெல்லாம் தயங்கிட்டு இருந்தா கண்ணை முடி திறக்குறதுக்குள்ள குழிக்குள்ள விழ வேண்டியிருக்கும். அப்புறம் மீள்வது கடினம்.

 

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். பிசினஸ்ல இது ரொம்ப முக்கியம்.

 

Read Previous

பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது?..

Read Next

சாக்ஷி மாலிக் : அரசியலில் நுழைய எதிர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular