சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் இதெல்லாம் நடக்கும் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் எக்கச்சக்க நன்மை..!!

இரவு 7:00 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா…

பனிச்சுமை சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரால் இரவு 10 11 மணிக்கு தான் சாப்பிட நேரம் கிடைக்கிறது சிலருக்கு வேலை நேரம் முடியவே இரவு 9 மணி 10 மணி ஆகிவிடுகிறது ஆனால் தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவதே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்…

காலை உணவு எப்போதுமே காலை 10 மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும் காரணம் முதல் நாள் இரவுக்கு பிறகு உணவு சாப்பிடாததால் காலை 9 மணிக்குள் பசி எடுக்க ஆரம்பித்து விடும் அதேபோல் மதியம் 2 மணிக்குள்ளும் இரவு எட்டு மணிக்குள்ளும் உணவு சாப்பிடுவது அவசியம் இதில் காலதாமதம் ஆனால் அல்சர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அது மட்டுமல்ல எப்போதுமே சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் உணவு செரிமானம் ஆகிவிடும் என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தாமதமாகும் போது குளுக்கோஸின் கிரகிக்கும் தன்மை குறைகிறது அத்துடன் வயிற்றில் புண் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது..

சர்க்கரை நோயாளிகள் : அதனால்தான் சர்க்கரை நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட சொல்கிறார்கள் இல்லாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் சிலர் காலை உணவை சாப்பிடாமல் நேரடியாகவே மதிய உணவை சாப்பிடுவார்கள் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது இரவு நேரத்தில் சாப்பிட்ட உடனே தூங்க செல்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செரிமானம் சீராக நடக்காமல் அஜீரண கோளாறு ஏற்படும் தூக்கமின்மை தந்துவிடும் அஜீரணம் இருந்தால் எவ்வளவு சத்தான உணவு சாப்பிட்டாலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு சென்றடையாது. இதனால் உடல் பலவீனம் அடைந்துவிடும்..

இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் இதயத்திலும் பாதிப்பை உண்டாக்கலாம் அதிக கலோரிகள் ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் இதயத்துக்கு தொந்தரவு வரலாம் இரவு சாப்பிட்டதும் தூங்கப் போனால் புவியீர்ப்பு விசையானது நம்முடைய செரிமான பாதைக்குள் உணவு நகர்ந்து செல்வதை தடை செய்கிறது மேலும் இரவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க கூடும். இரவு உணவிற்கு 20 நிமிடம் வாக்கிங் செல்வதால் செரிமானம் எளிதாகும் சரியான நேரத்தில் சாப்பிட்ட சரியான நேரத்தில் தூங்குவதால் நம்முடைய உடலில் நடைபெற வேண்டிய செயல்கள் சீரான முறையில் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நடைபெறும் இரவில் உடலுக்கு ஓய்வு கொடுப்பதால் எந்தவித அழுத்தமின்றி உடலின் நச்சுத்தன்மை வெளியேற்றும் வேலையை கல்லீரல் சீராக செய்ய முடிகிறது..!!!

Read Previous

மருத்துவ குணமிக்க அன்னாசிப்பழம் : ஆயுசை கூட்ட நாலு இலை போதுமே : அண்ணாந்து பார்க்க வைக்கும் அன்னாசி டீ..!!

Read Next

காலையில் எழுந்ததும் கால்களில் குத்துற மாதிரியான வலி இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் : டாக்டர் கூறுவது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular