பொன்னாங்கன்னி கீரையின் மருத்துவ பயன்கள் குறித்து மருத்துவர் சிவராமன் விவரித்துள்ளார் கண் சம்பந்தமான நோய்களை பொன்னாங்கண்ணி கீரை தடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…
பொன்னாங்கண்ணிக் கீரையின் மகத்துவம் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் சிவராமன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம். குழந்தை பருவம் முதலை பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பொன்னாங்கண்ணி கீரை அதிகமாக புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது பொன்னாங்கண்ணி கீரை அரிதாகவே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார், பொன்னாங்கண்ணிக் கீரை சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இரண்டுமே உடலுக்கு அதிகப்படியான சத்துக்களை கொடுக்கும் எனவும் இதனை சித்த மருத்துவத்தில் பெண்+ ஆம்+கான்+ நீ என பிரித்து கூறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார், பொன்னாங்கண்ணிக் கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் தங்கம் போல் ஜொலிக்கும் என பழங்காலத்தில் இருந்து சொல்லப்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதேபோல் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதையும் பொன்னாங்கண்ணி கீரை தடுக்கும் என குறிப்பிட்டுள்ளார் மேலும் போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணி கீரை ஆளே என தமிழ் ஒரு சொல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் அந்த அளவிற்கு கண்ணில் அனைத்து பகுதிக்கும் பொன்னாங்கண்ணி கீரை வலு சேர்க்கும் மேலும் உடல் சூட்டை தணிக்க பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை தலையில் தேய்த்து குளிக்கலாம் தலை முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு பரிந்துரைக்கப்படும் தைலங்களிலும் பொன்னாங்கண்ணி கீரையின் சத்துக்கள் காணப்படும், சிவப்பு பொன்னாங்கண்ணியில் சத்துக்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன இவற்றை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட வேண்டும் இவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்,மேலும் பொன்னாங்கண்ணிக் கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார் இதன் மூலமாக ரசாயனம் கலந்த கீரைகள் வாங்குவதை தடுக்க முடியும் என்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் முதுமையில் நோய்களை தடுக்க வேண்டும் அளவு இளமையிலேயே பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்..!!




