
சருமத்தை மென்மையாக்கும் ரோஜாவில் உள்ள அற்புதமான நன்மைகள்..!
சருமத்தை மென்மையாக்கும் பிங்க் நிற ரோஜா பூவின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சருமத்தை மென்மையாக்க பிங்க் நிற ரோஜாப்பூ தான் சிறந்தது. சருமத்துக்கும் ஏற்றது. இந்நிலையில் நாம் குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி இந்த ரோஜா இதழ்களை ஊற வைத்து அந்த தண்ணீரில் நாம் குளித்து வந்தால் உடலில் ஈரப்பதம் தக்க வைத்து சருமத்தை மென்மையாகவும் சருமம் வறட்சி இல்லாமலும் காணப்படும். ஒரு கப் வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை போட்டு அந்த நீருடன் இரண்டு துளிகள் ரோஸ் ஆயில் சேர்த்து முகக் கழுவி வர சருமம் இறுக்கமாகும். இளமையான தோற்றத்தை நாம் பெற முடியும். கருமையான நிறம் மாற ஆரம்பிப்பதை நீங்கள் கண்கூட பார்ப்பீர்கள். கருவளையம் பிரச்சினை உள்ளவர்களும் இதை செய்யலாம்.