
சர்க்கரை நோயாளிகளுக்கு கருப்பு கேரட் மருந்தாக இருக்கிறது.
பொதுவாகவே கேரட்டில் அதிகம் சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கருப்பு கேரட்டில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதைக் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
சாதாரண கேரட்டை விட கருப்பு கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.இது மலச்சிக்கல் பிரச்சனையும் போக்க உதவுகிறது. இது நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
மேலும் உடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமான ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அபாயத்தை குறைக்கும்.
இது மட்டுமில்லாமல் கண் பார்வைக்கு கருப்பு கேரட் மிகவும் சிறந்த ஒரு உணவு பொருளாகவே கருதப்படுகிறது.