
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன தெரியுமா..??
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு வகையை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன பழங்களை உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய பழம் நாவல் பழம். இந்த நாவல் பழம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் இதன் கொட்டையை பொடி செய்து கூட சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து சிறந்த ஆரோக்கியத்தை நமக்கு தருகிறது. சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது இதனால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். பேரிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.