சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் அளித்து வந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்…
மகாவிஷ்ணு அவர்கள் அரசு பள்ளியில் அழைக்கப்பட்டு பேச சென்ற பொழுது அப்பொழுது ஆன்மீகத்தை பற்றி பேசுவதாக ஏதேதோ பேசி ஆசிரியர் ஒருவருக்கும் மகாவிஷ்ணு அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர், முன் ஜென்ம பாவ புண்ணியத்தால் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக பேசி அவர் மீது தங்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய கோரிக்கை வைத்துள்ளனர், மகாவிஷ்ணு மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்ற நிலையில் திருப்பூரில் உள்ள அவரது மகாவிஷ்ணு அறக்கட்டளையின் விசாரணை நடைபெற்று வருகிறது, மாற்றுத்திறனாளிகள் பலரும் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை விசாரணை படுத்த வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை பிடித்துள்ளனர், மேலும் மகாவிஷ்ணு பேச்சு வார்த்தை மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது..!!