இந்திய அணியில் டெஸ்ட், T20, ODI என அனைத்திலும் நம்பர் 1 ஆட்ட நாயகனாக வலம் வருபவர் தான் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. இந்நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சச்சின் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்கள் எடுத்த நிலையில், தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதேபோன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், சச்சின், கவாஸ்கரை தொடர்ந்து 9,000 ரன்களைக் கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.