சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்..!!

பாகிஸ்தான் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்று கடைசி டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டக்கர் 73 ரன்களையும், ஆண்ட்ரூ பால்பிர்னி 35 ரன்களையும், ஹாரி டெக்டர் 30 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியானது பாபர் ஆசாம் – முகமது ரிஸ்வான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கேப்டன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி 38 அரைசதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பாபர் அசாம் 39 அரைசதங்களை விளாசி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சர்வதேசா டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்

  • பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) – 39
  • விராட் கோலி (இந்தியா) – 38
  • ரோஹித் சர்மா (இந்தியா) – 34

Read Previous

போச்சு சவுக்கு சங்கர் தான் காரணம்..!! பல்டி அடித்த ரெட் பீக்ஸ்..!! ஜேன் பெலிக்ஸின் பரபரப்பு கடிதம்..!!

Read Next

நெனச்சது உடனே நடக்கனுமா??.. எல்லாம் வல்ல சித்தரை கும்பிடுங்க..!! 7 நாளுல நடந்திடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular