சறுக்கிவிடும் சலனம் தடைப்படும் பயணம் ; எதுக்கும் ஏமாற மாட்டேன் என்று மார்தட்டுவோருக்கு கூட பணத்தாசை காட்டி சலனத்தை ஏற்படுத்தி விடுவார்கள்..!!

எதுக்கும் ஏமாற மாட்டேன் என்று மார்தட்டுவோருக்கு கூட பணத்தாசை காட்டி சலனத்தை ஏற்படுத்தி மொத்த உழைப்பையும் சுருட்டி கொண்டு விடும் மோசடியாளர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கென்று தனி அடையாளம் கிடையாது ஏன் யார் என்று கூட தெரியாது..

அழகாக பேசுவார்கள் அவர்கள் அனுப்பும் புகைப்படங்கள் அழகாக கவனத்தை ஈர்க்கும் அடடே நம் மேல் இப்படி அக்கறையுள்ள நபரா என்று மனதால் உருகி தான் போகும் அப்படி உருகி விட்டால் சின்ன மீனை போரிட்டு பெரிய மீன் பிடிக்கும் தந்திரம்போல் அவர்களது தூண்டில் நீங்கள் சிக்கி விடுவீர்கள் என அர்த்தம் இனி அவர்களது பணி எளிதாகிவிடும்…

பேராசை பெரு நஷ்டம் ; ஹோட்டல் உணவு மேஃப் ரிவியூ போன்றவற்றுக்கு ரேட்டிங் கொடுத்து பகுதி நேர வேலை வாய்ப்பு மூலம் வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் அதிக டாஸ்க்களை முடிப்பவர்களுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும் பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். இப்படி எல்லாம் ஆசை காட்டுபவர்கள் மனம் சலனப்படும் ஆசையை பேராசியாகும் போது கனவு உலகில் நடப்பது போல் மனிதர்கள் ஆயிரம் மின்னல்கள் பிளிறிடும். இதையெல்லாம் கறந்த பின் அனைத்தையும் இராசையாகி விட்டு மோசடி கும்பல் மாயமாகிவிடும் திருப்பூரில் இப்படி ஏமாறுவோர் அதிகம் டிஜிட்டல் அரெஸ்டில் கணக்கு இலட்சக்கணக்கில் பறிகொடுத்தவர்கள் உண்டு..

மக்களிடம் இருந்து பணம் பறிக்கவும் போலீசிடம் சிக்காமல் இருக்கவும் ஏகப்பட்ட யுக்திகளை மோசடிக்காரர்கள் கைவசம் வைத்துள்ளனர் மெத்த படித்தவர்கள் உயர்ந்த பணிகளில் உள்ளவர்கள் சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் மோசடிக்கு இரையாவது தான் கொடுமை. சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் திருப்பூரில் கடந்த ஆண்டில் கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி மோசடியாளிடம் ஏமாந்தவர்கள் அதிகம் வாரத்துக்கு ஓரிதண்டு புகார் வந்து விடுகிறது மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் புத்தாண்டில் மோசடியாளரிடம் இருந்து ஏமாந்து விடக்கூடாது இது நம் சபதமாக அமையட்டும் என்கிறார்கள் காவல்துறை நண்பர்கள்..!!

Read Previous

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள்..!! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

Read Next

நடுரோட்டில் குரூப் போட்டோ எடுக்க உதவி செய்த நபர்..!! திடீரெனெ நடந்த சோக சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular