சலார் படத்தின் முதல் பாடல் ஆகாச சூரியன் இன்று வெளியீடு..!! படக்குழு அறிவிப்பு..!!

“கே ஜி எஃப்” இரண்டு பாகங்களில் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலாம்” திரைப்படம்  உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையில், ஹோம்பாலே பிலிம்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த “சலார்” திரைப்படம் உலக அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மொத்தமாக 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடுகின்றது என்ற தகவல் நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில் “சலார்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஆகாச சூரியன்” என்கின்ற பாடல் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இந்த பாடல் நட்பு சார்ந்த பாடலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read Previous

அறுவை சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியாத உயிர்..!! இன்ஸ்டா பிரபலம் 2 நாட்களில் மரணம்..!!

Read Next

குடும்பச்சண்டையால் விபரீதம்..!! எலி மருந்து கொடுத்ததில் குழந்தை பலி..!! தாய் உயிர் ஊசல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular