சலார் படத்திற்காக சொந்த குரலில் 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்..!! நடுநடுங்கப்போகும் திரையரங்கம்.!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ரூர்  இசையில் பிரபாஸ், பிரித்திவிராஜ் சுகுமாரன், மீனாட்சி சவுத்ரி, சுருதிஹாசன், சரண், சக்தி ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீ ரெட்டி, ராமச்சந்திர ராஜ ஆகிய பலர் இணைந்து நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சலார் .

இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி உலக அளவிலும் திரையரங்கிற்கு வரவுள்ளது,ஹோம்பாலே பிலிம்ஸ்  நிறுவனம் தயாரித்து வழங்கும் சலார் திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

ரூ. 400 கோடி பொருட்செளவில் தயாரித்து உள்ள திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரதீப் ராஜ் சுகுமாரன் படம் வெளியாகும் பல மொழிகளில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

தனது குரல் பதிவுகளில் இருந்த குறைகள் அனைத்தையும் சரி செய்து டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பிரிதிவிராஜில் ஒவ்வொரு குரல் பதிவுக்குகும் திரையரங்கம் அதிர போகிறது என்று பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Read Previous

ஹீரோவாக அறிமுகமாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்..!! அசத்தல் அப்டேட்.!!

Read Next

தாமிரபரணி பானுவா இது?.. குழந்தையுடன் அம்மாவாக பெருமைப்படும் நடிகை..!! வைரல் கிளிக்ஸ் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular