
காலநிலை காரணமாக பொதுவாகவே குளிர்காலத்தில் நம்மில் பலருக்கும் சளி இருமல் காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இதனால் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை குழந்தைகள் உட்பட அனைவரும் அவதிப்படுவார்கள். இந்த சளி இருமல் பிரச்சனையை நீக்க நம் வீட்டிலேயே கசாயம் ஒன்று தயாரித்து குடித்தால் நாம் மருத்துவரை பார்க்க தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை செய்தாலே சளி இருமலை ஓட ஓட விரட்ட முடியும். இந்த சளி இருமலை போக்கும் கசாயம் எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
சளி இருமலை ஓட ஓட விரட்ட ஒரு துண்டு இஞ்சி, ஒரு அரை கைப்பிடி துளசி நன்குடித்து சாரை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு சாறையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு தேனை கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் இதை செய்தாலே நமக்கு கசாயம் ரெடி. இதனை சளி இருமல் உள்ள நாளில் தினமும் இரண்டு வேளை குறித்து வந்தால் சளி இருமல் பிரச்சனை தீரும். ஆனால், குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை சிறிதளவு மட்டுமே கொடுப்பது மிகவும் நல்லது. பல நோய்களுக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண முடியும். என்பதற்கு இந்த கசாயமும் ஒரு சான்றாகும்.