சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்..!! எப்படி செய்யணும்தெரியுமா?..

மழைக்காலம் வந்தாலே நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் ஜலதோசம்.

இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசையாக வந்து நிற்கும்.

இவற்றையெல்லாம் சரிச் செய்ய வேண்டும் மருந்து மாத்திரைகள் வாங்கும் முன்னர் சூடான ரசம் குடித்தால் போதும்.

அந்த வகையில் சளி, இருமல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கின்றது மிளகு ரசம்.

இது எப்படி செய்வது? வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி – 2
புளி கரைசல் – அரை கப்
சாம்பார் அல்லது ரசப்பொடி – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
பூண்டு – 8 பல்
வர மிளகாய் – 1
கறிவேப்பிலை – 2 கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு

ரெசிபி:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தக்காளி , உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ளவும். அதில் கொஞ்சமாக புளி கரைச்சல் சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். கொதிக்கும் புளி தண்ணீரில் சம்பார் பவுடர் மற்றும் இடித்த சீரகம், பூண்டு சேர்க்கவும்.

10 நிமிடங்கள் வரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் வேறொரு கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு தாளித்து, கடைசியாக கறிவேப்பிலை போட்டு ரசத்தை தாளிக்கவும்.

இறக்கிய பின்னர் கொஞ்சமாக ஆற விட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சளி, இருமல் யாவும் பறந்து போகும்.

முக்கிய குறிப்பு:

ஆஸ்துமா பிரச்சினையுள்ளவர்கள் கொடுப்பது கவனம். காரமாக இருந்தால் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணும்.

Read Previous

சித்தூரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் காயம்..!!

Read Next

அன்று ரூ.1600 சம்பளம்.. இன்று ரூ.9,800 கோடிக்கு அதிபதி..!! தொழிலதிபரான இளம்பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular