குளிர்காலத்தில் முட்டை சோப்பு குடிப்பது மிகவும் இதமாக இருக்கும் குறிப்பாக சளி மற்றும் காய்ச்சல் உள்ள போது குடிக்க ஏற்றதாக இருக்கும் இந்த சூப்பை எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் காணலாம்…
முட்டை இரண்டு பட்டை இரண்டு கிராம்பு நாலு கொத்தமல்லி சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு சுவைக்கு ஏற்ப தனியாத்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் கால் ஸ்பூன். மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன் கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் பட்டை கிராம்பு, சீரகம், சோம்பு இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அடுத்து மிளகாய் தூள் தனியா தூள் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து கிளற வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கடாயை மூடி அடுப்பில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இப்போது வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இதற்கிடையில் ஒரு பவுலில் அனைத்து முட்டைகளையும் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இப்போது கலக்கி வைத்துள்ள முட்டையை கடாயில் கொதிக்கும் சோப்பில் சேர்த்து நன்றாக கிளறி ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்கினால் ருசியான முட்டை சூப்பர் ரெடி..!!