
நமது உடலுக்கு நன்மை சேர்க்கும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று மிளகு சீரக சாதத்தை எப்படி சுலபமாக செய்வது என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
பெருங்காயம் – சிறிதளவு
புழுங்கலரிசி சாதம் – 2 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு -3 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரிப்பருப்பு – சிறிது
மிளகாய் – 2
வெங்காயம்-1
கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்க
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை :
அரிசியை வடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடலைப்பருப்பு மிளகாய் ஆகியவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகு சேர்த்து வறுத்த கறிவேப்பிலையை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
துருவி வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும். இனி இவற்றையெல்லாம் ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சேர்த்து முந்திரி பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
இதில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும். அரைத்து வைத்திருக்கும் பொடி தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான மிளகு சீரக சாதம் தயார்.